திருச்சி மாவட்டம் லால்குடி காவல் சராகத்திற்கு உட்பட்ட சமயபுரம், மண்ணச்சநல்லூர், லால்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கோவில் திருவிழா, பேருந்து நிலையம், பேருந்து உள்ளிட்ட பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் நகைகள் திருடுவது தொடர்கதையாகி வருகிறது. திருட்டை தடுக்கும் வகையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்தரவின்படி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோன்று சமயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் பல்வேறு இடங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது நம்பர் 1 டோல்கேட் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்ற பெண் ஒருவரை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் சமயபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்த போது
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரேகா வயது 42, இவர் திருமணம் ஆகி கணவனை பிரிந்து வாழ்ந்து வருகிறார் பல வருடங்களாக பல்வேறு இடங்களில் பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் நகை திருடியது தெரியவந்ததையடுத்து கைது செய்தனர். மேலும் சமயபுரம் காவல் 9 வழக்குகளும், மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் 3 வழக்குகளும், கொள்ளிடம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், லால்குடி காவல் நிலையத்தில் 3 வழக்குகள் என 16 வழக்குகள் ரேகா மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் திருடிய 29 லட்சம் மதிப்புள்ள 64 1/2 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்தனர்.