தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்து பல்வேறு திட்டப் பணிகளை இன்று துவக்கி வைத்தார். அந்த வகையில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சார்பில், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி – பஞ்சப்பூரில், 403 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5.58 இலட்சம் சதுர அடி பரப்பளவில் தரை தளம் மற்றும் ஆறு தளங்களுடன் டைடல் பூங்கா அமைப்பதற்கு காணொலிக் காட்சி வாயிலாக இன்று அடிக்கல் நாட்டினார்.

அதனை தொடர்ந்து திருச்சிராப்பள்ளி பஞ்சப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன்,  சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, செளந்தரபாண்டியன், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, டைடல் பூங்காவிற்கான அதற்கான பணிகளை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து முதற்கட்ட பணிகளை திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்