அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் டிடிவி_தினகரன் ஆணைக்கிணங்க, திருச்சி தெற்கு மாவட்ட அமமுக கழக ஆலோசனைக் கூட்டத்திற்கு அமமுக மாவட்ட அவைத் தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கிட திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் முன்னாள் கவுன்சிலர் செந்தில்நாதன் முன்னிலை வகித்தார், இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாக:- திருச்சியில் பெருகி வரும் போதை கலாச்சாரத்தை தடுக்க தவறிய மாவட்ட நிர்வாகத்தையும், மனமகிழ் மன்றம் என்ற பெயரில் தெருவுக்குத் தெரு சாராயக்கடை திறக்கும் அரசாங்க நிர்வாகத்தையும் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொகுதி பொறுப்பாளர்களை நியமித்த கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்களுக்கு நன்றி தெரிவித்தும், சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள், தொகுதி பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு தர தீர்மானமும், வருகின்ற செப்டம்பர் மாதம், கழக பொதுச் செயலாளரின் தலைமையில் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி செயல் வீரர்கள் மற்றும் செயல் வீராங்கனைகள் கூட்டம் நடத்திட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் கமுருதீன், தன்சிங், நாசர், அனுசுயா, முதலியார் சத்திரம் ராமமூர்த்தி, டோல்கேட் கதிரவன், ராஜா ராமநாதன், பஷீர் அகமது, வீர மணிமாறன், சசிகுமார், இதேபோல் பகுதி மற்றும் ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், கல்நாயக் சதீஷ்குமார், பொன்மலை சங்கர், கதிரவன், வேதாத்திரி நகர் பாலு வெங்கட்ரமணி, கருப்பையா, சீனி ராஜ்குமார், அழகர்சாமி, மணிகண்டன், துவாக்குடி ராஜா, வழக்கறிஞர் செங்குற்றவன், மதிவாணன், வெள்ளைச்சாமி, அப்துல்லா, நல்லுசாமி, சிங்காரம், பொன்னம்பட்டி சாகுல்,
சார்பு அணி செயலாளர்கள் முருகானந்தம், நாகநாதர் சிவகுமார், கண்ணன் ,வக்கீல் பிரகாஷ், சாந்தா, தண்டபாணி, ஆனந்தராஜ், செந்தில்குமார், நாகூர் மீரான், நல்லம்மாள் அகிலாண்டேஸ்வரி, மலைக்கோட்டை சங்கர், தருண், கோபிநாத், சுபாஷ், சதாம், நிர்வாகிகள் கருணாநிதி, நிக்சன், குரு ஸ்ரீதர், கைலாஷ் ராகவேந்தர், லோக்நாத் லோகு, ஜான் வெங்கடேஷ் , அஸ்வின் குமார், சமயபுரம் கிஷோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.