தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பை பொதுமக்களுக்கு விநியோகிக்கும் பணியை இன்று திருச்சி பெரிய மிளகு பாறை பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், வார்டு கவுன்சிலர் புஷ்பராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பெரிய மிளகுபாறை பகுதியில் உள்ள நியாய விலை கடையில் பொதுமக்களுக்கு கரும்பு, வேஷ்டி, வேலை, அரிசியுடன் கூடிய பொங்கல் பை ஆகியவற்றை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் அன்பழகனிடம்……. திருச்சி மாரிஸ் திரையரங்கம் அருகே உள்ள மேம்பால பணிகள் மந்தகதியில் நடைபெறுகிறது எப்பொழுது நிறைவு பெறும் என செய்தியாளர்கள் கேட்டபோது …. அது மத்திய அரசினுடைய வேலை எங்களது பணிகளை அவர்கள் நிறுத்த சொல்லிவிட்டனர். ரயில்வே தண்டவாளங்களுக்கு மேல் செல்லும் பகுதியை அவர்கள் கட்டி முடித்த பின்பு எங்களது பணிகளை தொடரச்சொல்லி அவர்கள் கூறியுள்ளனர். காலதாமதம் ஆவதற்கு ரயில்வே நிர்வாகமும் மத்திய அரசுமே பொறுப்பு. இது குறித்து நாங்கள் அவர்களிடம் கேட்ட போதும் அவர்கள் விரைவில் செய்து முடிக்கிறோம் எனக் கூறுகிறார்கள்.
திருச்சி மதுரை சாலை நத்தர்ஷா பள்ளிவாசல் முதல் செயின்ட் ஜோசப் சர்ச் வரை உள்ள சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக உள்ளது இதனால் அப்பகுதியில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் அடிக்கடி விபத்தை சந்தித்து வருகின்றனர். கடந்த 4 மாத காலமாக அந்த சாலை அப்படியே கிடப்பில் உள்ளதே என கேட்டதற்கு…… அந்த சாலை ஹைவேஸில் வருகிறது நாங்கள் அதற்குண்டான பணத்தை கட்டி உள்ளோம் ஹைவே சிலும் நாங்கள் அழைத்து இது பற்றி கூறியுள்ளோம் இன்னும் இரு தினங்களில் அந்த சாலையை அவர்கள் போட்டு விடுகிறேன் எனக் கூறியுள்ளனர். இன்று அல்லது நாளைக்குள் அந்த சாலையை போட்டு முடித்து விடுவோம் என்றார்.