அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பின் திருச்சி மண்டல மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பொதுமக்களுக்கு சேவை செய்து வழக்கறிஞர்களுக்கு “சேவை ரத்னா” விருது வழங்கும் விழா மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் அரங்கில் அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பு தலைவர் சத்தியசீலன் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக முன்னாள் நீதிபதி பூபாலன், காவல்துறை அதிகாரி பன்னீர்செல்வம், முன்னாள் நீதிபதி வைத்தியநாதன், தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர் வழக்கறிஞர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு சிறந்த முறையில் பொதுமக்களுக்கு சேவை செய்த திருச்சி குற்றவியல் சங்கத்தின் வழக்கறிஞர் வெங்கட், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் செயலாளர் கிருஷ்ணகுமார், சைக்கிளிங் வேர்ல்டு சேம்பியன் அம்பாசிடர் முனைவர் சௌந்தர்ராஜன், தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்கத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு இணை உறுப்பினர் வழக்கறிஞர் பாலாஜி, ஆகியோருக்கு விருதுகளை வழங்கி கவுரவித்து வாழ்த்துரை வழங்கினர். இவ்விழாவில் வழக்கறிஞர்கள் செல்வகுமார் சரவணன், பாபுசகாயராஜ், ஜான்சிராணி உட்பட தமிழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் கொரோணாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த வழக்கறிஞர் குடும்பத்திற்கு உடனடியாக சேமநல நிதியை வழங்க வேண்டும், வழக்கறிஞர்களின் சேமநல நிதியை ரூபாய் 7லட்சத்தில் இருந்து 15 லட்சமாக உயர்த்தி வழங்க பார்கவுன்சிலை வலியுறுத்துகிறது, வழக்கறிஞர்களின் குடும்பத்திற்கான மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும், வழக்கறிஞர்கள் மீது காவல் நிலையங்களில் பொய் வழக்குப் போடுவதை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.