திருச்சிராப்பள்ளி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் நாச்சியார் பாளையம் நியாய விலை கடையில் 1846 குடும்ப அட்டைகளுடன் செயல்பட்டு வருகிறது. இக்கடையினை இரண்டாகப் பிரித்து, லிங்க நகர் பகுதியில் புதிய முழு நேர அங்காடி நியாயவிலைக் கடையை தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் கலந்துக்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நெரு பேசியது.
திருச்சி பொருத்தவரை கடந்த 10 ஆண்டுகளாக ஆற்றில் இருந்த அதிமுகவை விட, திமுக ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு எண்ணற்ற பல திட்டங்களை செயல்பட்டு உள்ளது. குறிப்பாக மஞ்சப்பூர் பேருந்து நிலையம், உயர்மட்ட பாலங்கள், மெட்ரோ ரயில் பணிகள் என பல திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம். அதிமுக ஆட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள், சாலை பணிகளை தொடங்கிவிட்டு அதை முழுமையாக முடிக்காமல் விட்டு சென்று விட்டனர். தற்போது நிதி பற்றாக்குறையால் அப்பணிகள் கால தாமதமாக நடைபெற்று வருகிறது. அதிமுகவை பொறுத்தவரை எந்த ஒரு பணியையும் முழுமையாக செயல்படுத்த வில்லை.
மேலும் திருச்சி கோர்ட் எம்ஜிஆர் சிலை அருகே போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கூடிய விரைவில் உயர்மட்ட (எலிவேட்) மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ.இருதயராஜ் அவர்கள் தனது தொகுதியில் சரியாக குடிநீர் வரவில்லை குறிப்பாக வந்தாலும் களங்களாக வருகிறது என தெரிவித்துள்ளார் என்ற கேள்விக்கு??திருச்சி பொறுத்தவரை மாநகராட்சி உள்ள 65 வார்டுகளுக்கும் குடிநீர், சாலை வசதி என அனைத்தும் முழுமையாக செய்து தரப்பட்டுள்ளது. குறைகள் ஏதாவது இருந்தால் நிச்சயம் அது சரி செய்யப்படும். திருச்சி பொருத்தவரை கிழக்கு தொகுதி ,மேற்கு தொகுதி என்று பாகுபாடு கிடையாது மக்கள் அனைவரும் ஒன்றுதான்.