திருச்சி மாநகரில் NSB சாலையில் பிரம்மாண்டமான போத்தீஸ் சொர்ண மஹால் நாளை காலை திறக்கப்பட உள்ளது. இங்கு தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினங்களில் பல்வேறு வகையான டிசைன்களை பெண்களை கவரும் வகையில் நகைகள் நாளை முதல் விற்பனை செய்யப்படவுள்ளது.
இதுகுறித்து போத்தீஸ் சொர்ண மஹால் நிர்வாக இயக்குனர் ரமேஷ் செய்தியாளரிடம் கூறியதாவது… திருநெல்வேலி, சென்னை குரோம்பேட்டை , திருவனந்தபுரம், நான்காவது இடமாக திருச்சி மாநகரில் பிரம்மாண்ட முறையில் நகைக்கடை தொடங்க உள்ளோம். நான்கு தலைமுறைகளாக த சில்லறை ( துணி) விற்பனையில் இருந்தாலும், நகை விற்பனையில் ஈடுபட வேண்டுமென ரொம்ப நாளாக ஆசை. கடந்த 2021 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் தொடங்கி தற்போது நான்காவது கிளையாக திருச்சியில் தொடங்க உள்ளோம். எங்களுடைய தங்கம் முதல் தரத்திலும், தரமான வேலைப்பாடுகள் அதேபோல தங்க விற்பனையில் மற்ற தங்க நகைகளுக்கு விட குறைந்த விலையில் தரமானதாக வழங்குகிறோம், தங்கம் என்பது ஆபரணம் என்பதை விட, அதனை ஒரு சொத்தாக நாம் மதிக்கிறோம்.
கடந்த சில ஆண்டுகளில் பங்கு மார்க்கெட், இடம் ஆகியவற்றின் மதிப்பை விட தங்கத்தின் மதிப்பு கூடிக் கொண்டே வருகிறது. வடநாட்டை விட தென்னிந்தியாவில் நகையின் மீது பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் பெரும் நம்பிக்கையை வைத்துள்ளார்கள். அவர்களுடைய நம்பிக்கையை ஈடேற்றம் வகையில் நாங்கள், மார்க்கெட்டில் உள்ள மற்ற கடைகளை விட குறைவான விலைக்கு, தரமான தங்க நகை விலை விற்பனை செய்கிறோம். ஆண்டாள் ரங்கமன்னார், நவ கிரகங்கள் கொண்டு செய்யப்பட்ட தங்க நகை டிசைனுக்கு எங்களுக்கு விருது வழங்கப்பட்டது என பெருமையுடன் தெரிவித்தார். மேலும் திறப்பு விழா சலுகையாக நாளை தொடங்கி ஜனவரி 14ஆம் தேதி வரை பல்வேறு சலுகைகள் பரிசுகள் வாடிக்கையாளர்களுக்கு உள்ளது எனவும் தெரிவித்தார்.