தமிழக பள்ளிக்கல்வித்துறை மற்றும் திருச்சி மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் பிறந்த குழந்தை முதல் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கான இலவச மருத்துவ முகாம் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் புனித ஜான் பிரிட்டோ நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாமில் குழந்தைகள் நல மருத்துவர் ஆலோசனை. மனநல மருத்துவர் ஆலோசனை எலும்பு மூட்டு மருத்துவர் ஆலோசனை காது மூக்கு தொண்டை மருத்துவ ஆலோசனை கண் மருத்துவர் ஆலோசனை அன்னப் பிரிவு அறுவை சிகிச்சைக்கான ஆலோசனை
முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சைக்கான பதிவு மருத்துவ சான்றிதழ் வழங்குதல் தேசிய அடையாள அட்டைக்கான பதிவு மற்றும் புதுப்பித்தல் இலவச ரயில் மற்றும் பேருந்து பயண சலுகை உதவிக்கான பதிவு உதவி தொகைக்கான பதிவு ஆகியவை நடைபெற்றது இந்த மருத்துவ முகாமில் பள்ளி மாணவ மாணவிகள் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.