திருச்சி தீரன்நகர் ஆக்ஸ்போர்ட் பொறியியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான *Taekwondo* championship உள்விளையாட்டு போட்டி இன்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த போட்டியில் 7 வயது முதல் 40 வயது வரை உள்ள வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர்.
குறிப்பாக 7 வயது உடைய பிரிவினருக்கான போட்டிகளும் 11 வயது பிரிவினருக்கான போட்டிகளும் 14 வயது பிரிவினர்களுக்கான போட்டிகளும் 17 வயது பிரிவினர்களுக்கான போட்டிகளும் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்ட வீரர் வீராங்கனைகளுக்கான போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் திருச்சி தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர்,சென்னை, மயிலாடுதுறை, கும்பகோணம், உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து 700-க்கும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் வெற்றி பெறுபவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று பதக்கங்கள் நாளை 13ஆம் தேதி மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் வழங்கப்பட உள்ளது. மேலும் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டிக்கான ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட டேக்வாண்டோ பயிற்சி சங்கத்தின் தலைவர் துரைராஜ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.