திருச்சி திருவெறும்பூர் பகுதியில் உள்ள பொது மக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று நியூ டவுன் முத்துநகர் பகுதியில் பாலம் கட்டி முடிக்கப்பட்டது. இப்பாலமானது மூலதன மானிய நிதி 2023- 2024 ன் கீழ் மதிப்பீடு ரூ.131.00 லட்சத்தில் கட்டப்பட்டுள்ளது. இப்பாலமானது வார்டு எண் 40 மற்றும் வார்டு எண் 39 பாலாஜி நகரை இணைக்கும் வண்ணம் அமைந்துள்ளது. பள்ளியில் பயிலும் பள்ளி மாணவர்கள் நெடுஞ்சாலையை பயன்படுத்தாமல் பள்ளிக்கு செல்ல எளிதான முறையில் சுமார் 4.00 கிமீ தூரத்திற்கு பயணம் செய்வது குறைக்கப்பட்டுள்ளது. மேலும் அலுவலக நேரத்தில் நெடுஞ்சாலையில் திரும்புவதால் பள்ளி வாகனங்கள் விபத்து ஏற்படுவது தடுக்கப் பட்டுள்ளது.வார்டு எண் 39 மற்றும் வார்டு எண் 40ல் வசிக்கும் பொது மக்கள் சுமார் 10,500 நபர்கள் மற்றும் 4 ஆயிரம் பள்ளிக்கு செல்லும் பயனடைவார்கள்.

என்பதால் திருச்சி மாநகராட்சி மண்டலம் -3 வார்டு எண் 39,40 பகுதியை இணைக்கும் கவுருகரை வாய்க்காலின் குறுக்கே ரூ.131.00 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாலத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் திறந்து வைத்து மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தனர். இந்நிகழ்வில் கலெக்டர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன் மண்டல குழு தலைவர் மதிவாணன் மாமன்ற உறுப்பினர்கள் ரெக்ஸ், சிவக்குமார் நலச்சங்கங்களின் நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *