திருச்சி மாநகராட்சி 28-வது வார்டு தென்னூர் அண்ணா நகரில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 50 லட்சத்தில் சமுதாயக்கூடம் கட்டப்படுகிறது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளரும், திருச்சி மாநகராட்சி 28-வது வார்டு கவுன்சிலருமான பைஸ் அகமது வரவேற்று பேசினார். திருச்சி எம்.பி திருநாவுக்கரசர் அடிக்கல் நாட்டி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் கோவிந்தராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கவுன்சிலர் எல்.வி.,ரெக்ஸ், சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் இன்ஜினியர் பேட்ரிக் ராஜ்குமார், கவுன்சிலர்கள் சோபியா விமலா ராணி,சுரேஷ், பிரபாகரன், மண்டலம் ஐந்தின் உதவி கமிஷனர் சதீஷ்குமார்,உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் கண்ணா, இளநிலை பொறியாளர் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.