அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில் வருகிற ஜூன் 24ஆம் தேதி சனிக்கிழமை திருச்சி கலைஞர் அறிவாலயம் அருகிலிருந்து இரண்டாம் ஆண்டு ஸ்ரீ ஜெகன்நாத் ரத யாத்திரை புறப்பட உள்ளது இது குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இதில் திருச்சி ஸ்ரீரங்கம் இஸ்கான் பொது மேலாளர் நந்தபுத்திரதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில் ரத யாத்திரை என்கின்ற தேர்த்திருவிழா தொன்று தொட்டு ஒரிசாவில் உள்ள ஜெகந்நாத் புரியிலும் மற்றும் பல இடங்களிலும் கொண்டாடப்படுகிறது இஸ்கானின் ஸ்தாபக ஆச்சார்யர் ஸ்ரீல பிரபு பாதர் இந்த ரத யாத்திரை திருவிழாவை உலகம் முழுவதும் உள்ள இஸ்தான் மையங்களில் அறிமுகப்படுத்தினார். முதல் ரத யாத்திரை 1967இல் சான் பிரான்சிஸ் கோவில் நடைபெற்றது. மேலும் இந்த தேர் திருவிழாக்களில் பங்கேற்று இந்த தேர்தலில் பவனி வரும் ஜெகந்நாதரை தரிசித்தால் வாழ்க்கையின் இறுதியில் இறைவனின் திருநாட்டிற்கு திரும்புவீர்கள் என்பதற்காக திருச்சி வட்டாரத்தில் உள்ள அனைவருக்கும் இந்த வாய்ப்பை வழங்குவதற்காக இஸ்கான் ஸ்ரீரங்கம் மற்றும் திருச்சி மையங்கள் இணைந்து திருச்சி மாநகரில் இரண்டாம் ஆண்டாக ரத யாத்திரை விழாவை வருகிற ஜூன் 24ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த ரத யாத்திரை அதிநவீன பாதுகாப்பு அம்சங்களை கொண்டு 12 முதல் 18 அடி வரை ரதத்தின் விமானத்தை மேல் நோக்கி அல்லது கீழ்நோக்கி உயரத்தை கூட்டவும் குறைக்கவும் முடியும் ரதத்தை வடம் பிடிக்க இருபுறம் 65 அடி நீளமான உறுதியான கயிறு அமைக்கப்பட்டுள்ளது மேலும் 300க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் கலந்துகொண்டு ரதத்தை இழுத்து செல்ல முடியும். இந்த ரத யாத்திரையானது கலைஞர் அறிவாலயத்தில் இருந்து புறப்பட்டு அண்ணா சிலை மெயின் காட் கேட் மாரிஸ் தியேட்டர் பாலம் மெகா ஸ்டேட்டஸ் கரூர் புறவழிச்சாலை வழியாக மீண்டும் கலைஞர் அறிவாலயத்தை வந்து அடைகிறது. அங்கு பிரார்த்தனை செய்து பிரத்யேக பக்தி நாடகம் திரையிடப்பட உள்ளது அதனை தொடர்ந்து இறுதியாக ரத யாத்திரையில் பங்கேற்றவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட உள்ளது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை இஸ்கான் ஸ்ரீரங்கம் அமைப்பினர் செய்துள்ளனர்.என தெரிவித்தார்.