திருச்சி தென்னூர் ஆழ்வார் தோப்பு பகுதியில் ஏ ஒன் பிராய்லர் கோழி கடையை நடத்தி வருபவர் கிதர் முகமது இவரது மகன் ஆசிக் ரகுமான் என்பவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பாக அதே பகுதியில் தமிழக வெற்றிக்கழக மாநாடு நடைபெறுவது குறித்த பேனர் வைத்துள்ளார். இந்த பேனரில் இடம் பெற்ற ஆசிக் ரகுமான் புகைப்படத்தை அதே பகுதியை சேர்ந்த தமீம் என்பவர் பேனரை கிழித்துள்ளார்.
இதனால் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் நேற்று முன் தினம் அவரது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த பொழுது தமீம் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் ஆசிக் ரகுமானை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது.
மேலும் இது குறித்து காவல் நிலையத்தில் அவரது தந்தை பிதர் முகமது புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆசிக் ரகுமானை அதிமுக தில்லை நகர் பகுதி செயலாளர் முஸ்தபா தலைமையில் நிர்வாகிகள் ஜெயஸ்ரீ உள்ளிட்ட அதிமுகவினர் நேரில் சென்று பார்த்து அவரது தந்தை கிதர் முகமதுக்கு ஆறுதல் கூறினர்.