திருச்சி வண்ணாரப்பேட்டை பகுதியில் ஹவாய் ஸ்டோர்ஸ் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் மதுரை மண்டல ஓய்வு பெற்ற கல்லூரி கல்வி இயக்குனர் கூ.கூடலிங்கம், ஏ.வி.எம் ஃபிலிம் ஸ்டுடியோஸ் மேலாளர் VV.ஈஸ்வரன், இந்து சமய அறநிலையத் துறை ஓய்வு பெற்ற துணை ஆணையர் தேவேந்திரன், தேசிய நெடுஞ்சாலை துறை ஓய்வு பெற்ற கண்காணிப்பாளர் ரெகுபதி ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி வைத்து சிறப்பித்தனர்.
தொடர்ந்து ஹவாய் ஸ்டோர்ஸ் நிறுவனர் குரு முருகேசன் மற்றும் PA குரூப் நிறுவனர் முகமது அலி ஆகியோர் முதல் விற்பனையை தொடங்கி வைத்தனர். இந்த ஹவாய் ஸ்டோர்சில் வீடுகளுக்கு தேவையான தரமான, பாதுகாப்பான ஸ்டீல் கதவுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக நிறுவனர் தெரிவித்தார். மேலும் இந்நிகழ்வில் ரமேஷ், ஜெயந்தா உள்பட பலர் கலந்து கொண்டனர்.