திருச்சி – மதுரை பைபாஸ் சாலையில் உள்ள பஞ்சப்பூரில் ரூபாய் 380கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த ஒருங்கிணைந்த பேருந்து நிலையப் பணிகள் நடைபெற்று வருகிறது இப்ப பணிகளை தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என்.நேரு நேரில் சென்று பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் தமிழகத்தில் முன்னாள் மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி 100 இடங்களில் மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டு திட்டத்திற்கான பதிவு நடைபெற்று வருகிறது. திருச்சியில் எடமலைப்பட்டி புதூர் அரியமங்கலம் லால்குடி உள்ளிட்ட மூன்று இடங்களில் நடைபெறுகிறது இதில் ஒவ்வொரு முகாம்களிலும் 100 மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர் என தெரிவித்தார்.
மேலும், ஒருங்கிணைந்த பேருந்து பணிகள் தற்பொழுது 380கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. அடுத்தபடியாக மார்க்கெட் கொண்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்கான திட்ட அறிக்கைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனைகளை கொண்டுவதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. குடம்முருட்டியில் இருந்து பஞ்சப்பூர் வரை சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளுக்காக திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு முதலீடுகளுக்காக வைக்கப்பட்டுள்ளது. 10 ஏக்கரில் ஐடி பார்க் வரவுள்ளது. மேலும் பஞ்சப்பூர் பைபாஸ் சாலைக்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பேருந்து நிலையத்திற்கு வருவது போல கத்திபாரா போன்று டிசைன் அமைக்கப்பட்டுள்ளது. வெயிலில் நீரை காய வைக்கும் முறையில் சுமார் 300 கோடி செலவில். ஒரு நாளைக்கு 100 எம்.எல்.டி சுத்திகரித்து வாய்க்கால்களில் விடப்படவுள்ளது.
நேற்று நெடுஞ்சாத்துறை முதன்மை அதிகாரிகள் பார்வையிட்டுள்ளனர். தற்பொழுது காவிரி பாலம் முதல் குடமுருட்டி வரை மேல்மட்ட சாலை பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளது. இதேபோல் புதிய காவிரி பாலமும் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளது என தெரிவித்துள்ளார். திருச்சி மெட்ரோ இரயில் பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது தெரிவித்தார். ஆய்வின் போது திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.