திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சென்னையை சேர்ந்த நகைக்கடை ஊழியர்கள் சென்ற காரை மறித்து, மிளகாய்பொடி தூவி ரூ.10 கோடி மதிப்புள்ள 10 கிலோ நகைகளை கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர் விசாரணையில் கார் டிரைவர் பிரதீப்(வயது 24), அவருடைய நண்பர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அனுமன்ராம்(21), கைலாஷ்(20), வினோத் என்ற பன்னாராம்(31), முகமது சோகைல்(21), மனோகர்ராம்(27), மணீஸ்சிரோகி(19), மங்கிலால் கனாராம் (22) மற்றும் விக்ரம் ராம்நிவாஸ் ஜாட் (18) ஆகியோருடன் கூட்டு சேர்ந்து நகைகளை கொள்ளையடித்தது தெரியவந்தது. மேலும் தங்க நகைகளுடன் மங்கிலால் கனாராம், விக்ரம் ராம்நிவாஸ் ஜாட் ஆகியோர் மும்பைக்கு தப்பி சென்றனர். பின்னர் இவர்களில் ஏழு பேரை தமிழக காவல்துறையினர் கைது செய்தனர். ராஜஸ்தானைச் சேர்ந்த இரண்டு பேரை மத்திய பிரதேச போலீசார் கைது செய்து நகை பணத்தை கைப்பற்றினர்.பின்னர் வட மாநிலத்தைச் சேர்ந்த கணவன் மனைவி உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர் ஆக மொத்தம் இந்த வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கைதான 12 பேரையும் எஸ் பி செல்வ நாகரத்தினம் முன்னிலையில் ஊடகங்களுக்கு வெளிக்காட்டினர். மேலும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட நகை பணம் சொகுசு கார் துப்பாக்கி ஆகியவற்றையும் போலீசார் காட்சிப்படுத்தினர். பின்னர் எஸ்.பி செல்வ நாகரத்தினம் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது,

சென்னை சவுகார்பேட்டையில் இயங்கி வரும் தங்க நகை கடையின் மேலாளர் கடந்த மாதம் 8ம் தேதி கிலோ கணக்கில் தங்க கட்டிகளை காரில் எடுத்துக்கொண்டு சேலம், கோயமுத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விற்பனைக்கு கொடுத்தனர். பின்னர் திண்டுக்கல்லில் ஒரு நகை கடையில் விற்பனையை முடித்த இவர்கள் மீதமுள்ள 10 கிலோ தங்க நகைகளுடன் கடந்த செப்டம்பர் 13ம் தேதி புறப் பட்டு சென்னை சென்று கொண்டிருந்தனர். காரை ராஜஸ்தானை சேர்ந்த டிரைவர் பிரதீப் ஓட்டினார். திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரத்தை அடுத்த இருங்களூர் அருகே வந்தபோது இயற்கை உபாதையை கழிப்பதற்காக காரில் இருந்த மூவரும் கீழே இறங்கினர். அப்போது அங்கு வந்து நின்ற மற்றொரு காரில் இருந்து இறங்கிய ராஜஸ்தான் மாவட்டத்தை சேர்ந்த விக்ரம் ஜாட் , மங்கிலால் ஆகிய இருவரும் காரில் இருந்து இறங்கி கண்ணிமைக்கும் நேரத்தில், தங்கம் ஏற்றி வந்த கார் டிரைவர் உள்ளிட்ட 3 பேரின் கண்களில் மிளகாய் பொடியைதூவி காரில் 9.9 கிலோ தங்க நகைகளை கொள் ளையடித்து சென்றனர். இது குறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. உடனடியாக நான் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டேன். குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. குற்றவாளிகல் கர்நாடகம் சென்றது தெரிய வந்தது. தனிப்படை போலீசார் கர்நாடகா, ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், பீகார் உள்ளிட்ட ஆறு மாநிலஙகளுக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபடனர். போலீசார் நடத்திய விசாரணையில் கார் ஓட்டுனர் பிரதீப் தான் நகைகளை கொள்ளையடிக்க திட்டம் தீட்டியது தெரிய வந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் டிரைவர் பிரதீப் யோசனைப்படி, இந்த கொள்ளை திட்டத்தை தீட்டியதும் தெரிய வந்தது. அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் பெண் உட்பட 12 பேரை கைது செய்துள்ளோம். ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிலிருந்து கைது செய்துள்ளோம்.

இதில் முக்கிய குற்றவாளி கார் ஓட்டுநர் பிரதீப் தான். அவர் மூன்று மாதஙகளுக்கு முன்பு தான் பணியில் சேர்ந்துள்ளார். அவர் தான் நகைகளை எடுத்து செல்வது குறித்து தகவல் கொடுத்துள்ளார். நகை கடைக்காரர்கள் எந்த எந்த மாவட்டஙகளுக்கு சென்றார்களோ அங்கு பின் தொடர்ந்து சென்றுள்ளனர். திருச்சியில் கொள்ளையடித்து உள்ளனர். கார் மீது மோதி விபத்து ஏற்படுத்தி கொள்ளையடிப்பது தான் திட்டம் ஆனால் அவர்கள் வரும் வழி எல்லாம் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்ததால் அவர்களால் அதை செய்ய முடியவில்லை பின்னர் எதார்த்தமாக காரை நிறுத்திய போதி கொள்ளையடித்து சென்றுள்ளனர். அவர்கள் பயன்படுத்திய கார் போலி பதிவெண் கொண்ட கார். நாங்கள் சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் பின் தொடர்ந்து குற்றவாளிகளை பிடித்துள்ளோம். இதில் கடந்த 25 நாட்களாக தனிப்படை போலீசார் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். இந்த வழக்கில் மொத்தம் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் அவர்களிடமிருந்து 9.9 கிலோ நகையை கொள்ளையடிக்கப்பட்டது. அதில் 9. 689 கிலோ நகையை மீட்டுள்ளோம். 6 லட்சம் ரூபாய் பணத்தையும் மீட்டுள்ளோம். மேலும் அவர்களிடமிருந்து துப்பாக்கி, கொள்ளையடிக்க பயன்படுத்திய காரை பறிமுதக் செய்துள்ளோம்  கொள்ளையடிக்கப்பட்டதில் 97 சதவீதம் நகை மற்றும் பணம் மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் தமிழ்நாட்டில் வேறு வழக்குகள் இல்லை ஐந்து பேருக்கு மட்டும் வட மாநிலங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. பொதுவாக வட மாநிலத்தோரை பணிக்கு அமர்த்தும் போது அவர்களின் பின்புலத்தை முழுமையாக விசாரணை செய்து பணியில் அமர்த்த வேண்டும். மொத்தமாக கிலோ கணக்கிலான நகைகளை காரில் எடுத்து செல்ல கூடாது. இது போன்று செல்லும் போது போலீஸ் பாதுகாப்பு தேவையெனில் முறையாக காவல் துறையை அணுகி அதை பெற்று கொள்ளலாம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்