தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின் கீழ் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இன்று முதல் 27ம் தேதி வரை 11ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. முதல் நாளான இன்று தமிழ் உள்ளிட்ட மொழி பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இந்நிலையில் திருச்சி வருவாய் மாவட்ட அளவில் 106 அரசு பள்ளிகள், 71 அரசு உதவிப்பெறும் பள்ளிகள், 81 தனியார் மெட்ரிக் பள்ளிகள் ஆகமொத்தம் 258 பள்ளிகளிலிருந்து 131 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.
திருச்சி மாவட்டத்தில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 15,357 மாணவர்கள், 16,737 மாணவிகள் என மொத்தம் 32,094 பேர்கள் தேர்வு எழுதுகின்றனர். இதில் மாற்றுத் திறனாளிகளுக்கான சலுகையினை பெற்று 392 பேர்கள் தேர்வு எழுதுகின்றனர். மேலும் தனித்தேர்வர்களாக 271ஆண்கள், 176 பெண்கள் என மொத்தம் 447 பேர்கள்14 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு எழுதும் மையங்களை ஆய்வு செய்வதற்காக திருச்சி மாவட்டத்தில் மட்டும் 230 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.