ஜோயாலுக்காஸ் பிரில்லியன்ட் வைர கண்காட்சி திருச்சியில் இன்று முதல் ஜூன் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது. இக்கண்காட்சியை சிறப்பு விருந்தினர்களாக நடிகை யாஷிகா, பெரம்பலூர் மாவட்ட துணை ஆட்சியர் வைத்தியநாதன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி கண்காட்சியை துவக்கி வைத்தனர். கண்காட்சியில் கிருஷ்ணலீலா கலெக்ஷன்களில் மிகவும் அரிதான அற்புதமான மற்றும் பொக்கிஷமான நகைகளின் அழகிய தொகுப்பு இடம்பெறுகிறது. ஜோயாலுக்காஸ் இந்த வைர கண்காட்சிக்காக ஒவ்வொரு படைப்பும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு விசேஷமாக தொகுக்கப்பட்டுள்ளது.
திருச்சியின் நகைப் பிரியர்கள் பாரம்பரியத்தையும், புதுமையையும் பிரதிபலிக்கும், கலைத்திறன் மற்றும் நேர்த்தியை வெளிப்படுத்தும் விதமாகவும், கண்டிராத புதுமையான தயாரிப்புகளை இந்த கண்காட்சியில் காணலாம். இங்கு அழகை, தனித்துவமான காலம் வென்ற ஒரு பரிமாணத்தை இங்குள்ள ஒவ்வொரு நகையும் உணர்த்துவதை நீங்கள் உணரலாம். இந்த ஆண்டின் சிறந்த வைர நகைகள் தந்திடும் அற்புத அனுபவமாக வாடிக்கையாளர்களுக்கு அமையும்.
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜோயாலுக்காஸ் தலைவர் மற்றும் செயல் இயக்குனர் ஆண்டனி ஜோஸ் அதிநவீன மற்றும் தனித்துவமான வடிவங்களில் வைரங்களின் பிரகாசத்தைக் கொண்டாடும் ஒரு அனுபவத்தை உருவாக்குவதற்கான எங்கள் தொலைநோக்குப் பார்வையைப் பிரதிபலிக்கிறது” திருச்சியின் வாடிக்கையாளர்கள் அற்புதமான ஒன்றை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள், அதை வழங்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்” இந்த கண்காட்சியில் வாடிக்கையாளர்கள் ரூ₹1லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள ஒவ்வொரு வைர நகைகள் வாங்கும் போது 1கிராம் தங்க நாணயம் இலவசமாக வழங்கப்படும்.
ஜோயாலுக்காஸ் பிரில்லியன்ஸ் டைமண்ட் கண்காட்சி திருச்சி தெப்பக்குளம் அருகில் உள்ள ஜோயாலுக்காஸ் ஷோரூமில் நடைபெறுகிறது. துணைப் பொது மேலாளர் (சில்லறை விற்பனை)ராஜேஷ் கிருஷ்ணன், துணைபொது மேலாளர் ( மார்க்கெட்டிங், அனிஷ் வர்கீஸ், சென்னை மண்டல மேலாளர், லிஜோஜாய் உட்பட பலர் கலந்து கொண்டனர்.