மக்களவை தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசினார் :தேர்தல் நடத்தை விதிகள் தற்போது அமலுக்கு வந்துள்ள நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் செய்ய வேண்டிய பணிகள் 48 மணி நேரத்தில் செய்ய வேண்டிய பணிகள் என பல்வேறு பணிகள் உள்ளது – இவை அனைத்தையும் உடனடியாக மேற்கொள்ள உள்ளோம். திருச்சியை பொறுத்தவரை 27 பறக்கும் படை குழுவினர் பணியில் இருப்பார்கள் – எந்த நேரத்திலும் பண பட்டுவாடா பரிசுகள் வழங்குவது போன்றவை நிகழாமல் இருப்பதை அவர்கள் கண்காணிப்பார்கள்.
முதற்கட்டமாக அரசு அலுவலகங்களில் 24 மணி நேரத்திற்கு உள்ளாக போஸ்டர்கள்,அரசியல் தலைவர்களின் படங்கள் போன்றவற்றை அகற்றும் பணி நடைபெறும். வாக்காளர்கள் எந்த நேரத்திலும் எந்த வித புகாரையும் தெரிவிப்பதற்கு ஏதுவாக கண்ட்ரோல் ரூம் செயல்பட்டு வருகிறது – இலவச எண் அறிவித்துள்ளோம். C- VIGIL மொபைல் அப்ளிகேசன் வாயிலாகவும் வாக்காளர்கள் பணம் பட்டுவாடா அல்லது பரிசு பொருட்கள் கொடுப்பது போன்ற புகார்களை தெரிவிக்கலாம் – அவ்வாறு புகார் தெரிவிக்கும் பட்சத்தில் 100 நிமிடங்களில் அந்த இடத்திற்கு சென்று புகாரை விசாரித்து குழுவினர் நடவடிக்கை எடுப்பார்கள். தேர்தல் நடைபெறும் கால்கட்டம் திருவிழாக்கள் நடைபெறும் காலம் என்பதால் அன்னதானம் செய்பவர்களாக இருந்தாலும் கண்டிப்பாக காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் முன்கூட்டி அனுமதி பெற வேண்டும் – மேலும் அன்னதான பந்தலில் எந்தவித கட்சி கொடிகளோ அல்லது கட்சியை சேர்ந்த பிரமுகர்களின் புகைப்படங்களோ இடம் பெறக் கூடாது.