தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கடந்த 43 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று கரும்புள்ளி செம்புள்ளி குத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரியில் மேகதாது அணைக்கட்ட கூடாது என்றும் காவிரியில் மாத மாதம் தண்ணீர் திறக்க மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். விவசாயிகள் உரிமைக்காக ஜனநாயக நாட்டில் , டெல்லி சென்று போராட முதலமைச்சர் அனுமதி வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அய்யாகண்ணு:- விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட திட்டத்தை மத்திய ,மாநில அரசுகள் முறையாக செயல்படுத்தவில்லை. குறிப்பாக கரும்பு, நெல் டன்னுக்கு அரசு நிறுவனத்தை விலையை இதுவரை விவசாயிகளுக்கு வழங்கவில்லை. மேலும் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீரை உடனடியாக திறக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும், அந்த மாநில அரசு இதுவரை திறக்கப்படாமல் இருப்பது கண்டனத்திற்குரியது. விவசாயிகள் வாழ்வாதாரம் இல்லாமல் தவித்து வருகிறார்கள் இவற்றை அரசாங்கத்திற்கு உணர்த்தும் வகையில் இன்று கரும்புள்ளி செம்புள்ளி குத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எங்களுடைய கோரிக்கை நிறைவேறும் வரை காத்திருக்கு போராட்டம் தொடரும் என்றார்.