திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவனம் மத்திய பொது துறை நிறுவனங்களில் பெல் ஒன்றாகும். இந்த பெல் நிறுவன வளாகத்தில் 4000 சதுர அடி நிலப்பரப்பில் 12 அடி உயரத்தில் 7 அடி உயரத்தில் 506 கிலோ எடை கொண்ட ரூபாய் 8 முதல் 10 லட்சம் மதிப்பிலான தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் திருஉருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டு உள்ளது
அதனை தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி வருகிற ஜூலை 6ம் தேதி திறந்து வைப்பதோடு இங்கு நடைபெறும் பொது கூட்டத்திலும் கலந்து கொள்கிறார். அதற்கான முகூர்த்த கால் நடும்பணி இன்று காலை நடைபெற்றது.இந்த விழாவில் ஏடிபி தொழிற்சங்க பொதுச் செயலாளர் கார்த்திக், உட்பட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.