திருச்சி எஸ்ஆர்வி பள்ளியை சேர்ந்த மாணவர்கள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் விழிப்புணர்வு பேரணி சென்றனர். டிஜிட்டல் அடிமை தவிர்ப்போம், சமூக ஊடகத்தில் எல்லை மீறாதீர், லைக் ஷேர் நமது திறமை இல்லை நம் நடத்தைதான் திறமை, வாசிப்பே மாற்றத்தின் விதை, கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு போன்ற பதாகைகளை கைகளில் ஏந்தி மாணவர்கள் பேரணியாக நடந்து சென்றனர்.

இன்றைய மாணவர்கள் மொபைல் போனில் படிப்பது பேஸ்புக் இன்ஸ்டாகிராம் போன்றவற்றை பார்ப்பதனால் இதனால் அவர்களது மனநிலையை ஒருங்கிணைப்படுத்த முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அதை தவிர்த்து அவர்கள் புத்தகங்கள் படிப்பது நல்லது என்பதை வலியுறுத்தும் விதமாக இந்த பேரணி சென்றுள்ளோம் சமூக ஊடகங்களால் ஏற்படும் தீமைகளும் புத்தகங்கள் படிப்பதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு வலியுறுத்தும் விதமாக இந்த பேரணி நடைபெற்றது.
