திருச்சி மாவட்டம் உய்யக்கொண்டான் ஆற்று பாலம் அல்லி துரை சோமரசம்பேட்டை அதவத்தூர் கிழக்கு கிராம எல்லையில் மன மகிழ் மன்றம் என்கிற பெயரில் திறக்க இருந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ம. ப சின்னதுரை தலைமையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து இன்று மாலை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரை நேரில் சந்தித்து டாஸ்மாக் கடை திறக்க கூடாது எனக் வலியுறுத்தி கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.
அதனைத் தொடர்ந்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் திருச்சி மாவட்ட தலைவர் ம.ப. சின்னதுரை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தல் வாக்குறுதி படி திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஆண்டுக்கு 500 மதுக்கடைகளை மூடுவதாகவும் 2026 ஆம் ஆண்டு முழு மதுவிலக்கை அமல்படுத்துவதாக தேர்தல் வாக்குறுதி அளித்தார். ஆனால் தமிழகத்தில் தற்போது புதிது புதிதாக மதுக்கடைகளை திறந்து வருகிறார் அந்த வகையில் திருச்சி மாவட்ட எல்லை பகுதியில் புதிதாக டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இதை கண்டித்து போராட்டம் நடத்தினோம் அந்தப் போராட்டத்தை தொடர்ந்து. மதுக்கடை திறக்கப்படாது என அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர். ஆனால் அதையும் மீறி கடந்த ஜூன் மாதம் மீண்டும் எஃப் எல் டு மனமகிழ் மன்றம் என்கிற பெயரில் கடை நடத்திட அனுமதி வழங்கி உள்ளதை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தண்ணீர் இருந்தா போராட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
ஆனால் மீண்டும் நேற்று எஃப் எல் டு மதுபான கடை நடத்திட அனுமதி வழங்கியதை கண்டித்து அந்த கடை அருகே தண்ணீர் அருந்தா உண்ணா நிலை போராட்டம் இன்று நடைபெற்றது. அதிகாரிகளில் பேச்சு வார்த்தையை தொடர்ந்து இன்று மாலை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து எங்களது கோரிக்கையை மனுவாக அளித்தோம் அதன் அடிப்படையில் தற்போது மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அந்த மன மகிழ் மன்றத்தை நிரந்தரமாக அடைப்பதாக வாக்குறுதி அளித்து உள்ளார். அப்படி மீண்டும் கடை திறக்கப்படும் ஆனால் மிகப் பெரிய போராட்டம் நடைபெறும் என தெரிவித்தார்..