திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அதவத்தூர் பகுதியில் 6200 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கான்கிரீட் தளத்துடன் கூடிய மேற்கூரை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு வந்த திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மாபா சின்னதுரை கோரிக்கை மனு அளித்தார். உடனடியாக மாவட்ட ஆட்சித் தலைவர் ஆக்கிரமிப்பு செய்த இடங்களை அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் அதிகாரிகளுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான தூரிது நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
இதுகுறித்து தமிழக விவசாய சங்க மாவட்ட தலைவர் மாபா சின்னதுரை நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது.
அதவத்தூர் பகுதியில் 6200 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கான்கிரீட் தளத்துடன் கூடிய மேற்கூரை திட்டத்தை துவக்கி வைத்த தமிழக முதல்வருக்கு விவசாயிகள் சார்பில் நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். குறிப்பாக இந்த கிடங்கிற்கு வரும் நெல்லை ஏற்றி வரும் லாரிகள் சாலை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்படுவதால் போக்குவரத்து ஏற்பாடுகிறது. மேலும் திருச்சி புத்தூர் ரோட்டில் இருந்து வயலூர் சாலை வழியாக தோகைமலை சாலை ஆகிய பகுதிகள் ஏற்கனவே நெருக்கடியில் இருந்து வருகிறது குறிப்பாக ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மாநகராட்சி துறை அதிகாரிகள் அகற்றாமல் இருப்பது குறித்து பலமுறை குற்றம் சுமத்தியுள்ளோம். மேலும் இருக்கிற சாலை ஓரத்தில் 5 அடி 5 அடி என இரண்டு பக்கமும் மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. உயர் கொண்டான் ஆறு பெட்டவாய்த்தலை துவங்கி வாழவந்தான் கோட்டை வழியாக தஞ்சாவூர் வரை செல்கிறது.
கோப்பிலிருந்து அதவத்தூர் எல்லை வரை முடிகிற பகுதியில் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விரிவாக்கத் திட்டத்தை தொடர்ந்து கொண்டு செல்லவில்லை. பெட்டவாய்த்தலை தொடங்கி வாழவந்தான் கோட்டை வரைக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றி உய்யக்கொண்டான் ஆற்றின் உண்மையான கரையை விரிவாக்கம் செய்தால் போக்குவரத்து நெரிசல் இப்பகுதியில் ஏற்படாது. இது குறித்து அரசிடம் தொடர்ந்து இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் மாடர்ன் ரைஸ் மில் நவீன அறவாலை முன்பு 38 அடி கொண்ட நீர் நிலை புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து ரியல் எஸ்டேட் போடப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் வரும் வாகனங்கள் சாலை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது குறிப்பாக பள்ளி மாணவ மாணவிகள் சைக்கிள் கூட செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. ஆடு மாடுகள் குதிரைகள் அளவுக்கு மீறி பகுதியில் திரிவதால் விபத்துகளும் அடிக்கடி ஏற்படுகிறது. இந்த மாடர்ன் ரைஸ் மில் இருக்கு வருவதற்கு கருமண்டபம் தொடங்கி நாச்சி குறிச்சி ஊராட்சி அல்லித்துறை ஊராட்சி வழியாக அதவத்தூர் அப்படியே கரூர் மங்கம்மா சாலை வரை செல்கிறது. இந்த 100 அடி சாலையை மாடர்ன் ரைஸ் மில் அருகே கொண்டு வந்து சேர்த்தால் போக்குவரத்து சிரமம் இல்லாமல் இருக்கும். அதேபோல் புதுக்குளம் ஆக்கிரமிப்புகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் நேரில் சென்று பார்வையிட்டு மங்கம்மா சாலை மற்றும் புது குளம் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.