திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம். எட்டரை கிராமத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் நடைபெற்ற விழாவில், 19.76 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து. புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, டிராக்டர் மற்றும் தூய்மைப் பணி வாகனங்களை அமைச்சர் கே என் நேரு கொடியசைத்து தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, விழா பேருரையாற்றினார்.
மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது: அந்தநல்லூர். பகுதி பொதுமக்களின் முக்கியமான கோரிக்கையாக குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்த மொத்தம் ஏழு ஏரிகள் குறிப்பாக புங்கனூர், கள்ளிக்குடி, குண்டூர், உள்ளிட்ட ஏரிகளை செப்பனிட்டு அதன் மூலம் தூய்மையான குடிநீர் வழங்குவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், ஸ்ரீரங்கத்திற்கு ஒரு பேருந்து நிலையம் வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை வைத்தார் அதற்காக 190 கோடி ரூபாய் மதிப்பிலான பேருந்து நிலையம் தயாராகி வருகிறது மேலும், விவசாயிகள் தங்களுடைய உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்கான மார்க்கெட் வேண்டும் என்று கேட்டார்கள் அந்த பணிகளும் நடைபெற்று வருகிறது. மேலும், ஏழை எளிய மக்களுக்கான இலவச பட்டா 1800 பேருக்கு வழங்குவதற்கு தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். எனவே, தொடர்ந்து ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து தேவைகளையும் செய்துதர நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார். மாநகராட்சி மேயர் அன்பழகன், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தேவநாதன், திட்ட இயக்குனர் மகளிர் திட்டம் ரமேஷ் குமார். அந்தநல்லூர் ஒன்றிய குழுத் தலைவர் திரு.ச.துரைராஜ், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள். அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.