உலக இதய தினத்தை முன்னிட்டு அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் சார்பில் திருச்சியில் “இதயம் பார்த்துக்கோங்க” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நடைப்பயண பேரணி இன்று நடைபெற்றது. இந்தப் பேரணியை திருச்சி போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
முன்னதாக இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது இன்றியமையாதது தற்போது மாரடைப்பு நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது, ஏனெனில் இது குறித்த போதிய விழிப்புணர்வு பொதுமக்களிடம் இல்லாதது தான் காரணம் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவதன் மூலம் மாரடைப்பை தவிர்க்க வழி வகை செய்யும் என திருச்சி போலீஸ் கார்த்திகேயன் தெரிவித்தார்.
டாக்டர் அஷ்ரஃப் ஒரு மூத்த மருத்துவர் இதய ஆரோக்கியம் மற்றும் இளைய மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய நடைபயண பேரணி சுப்பிரமணியபுரம் வழியாக டிவிஎஸ் டோல்கேட் சென்று அங்கிருந்து ரேஸ்கோர்ஸ் சாலை வழியாக அண்ணா விளையாட்டு அரங்கை வந்து அடைந்தனர்.
இந்த நடப்பேன பேரணியில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார வல்லுநர்கள், காவல்துறை அதிகாரிகள், பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த தன்னார்வலர்கள் மற்றும் கடந்த காலங்களில் இருதய நோய்க்கு சிகிச்சை பெற்றவர்கள் என சுமார் 400 பேர் கலந்து கொண்டு இதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்த வாசகங்களை ஏந்திய பதாதைகளை எடுத்து சென்றனர்.
இந்நிலையில் முதுநிலை மருத்துவர் அஷ்ரப், மருத்துவ நிர்வாகி டாக்டர் சிவம், சங்கீத் DGM, இருதயநோய் நிபுணர்கள் டாக்டர் காதர், டாக்டர் ரவீந்திரன், டாக்டர் ஷியாம் சுந்தர், இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஸ்ரீகாந்த், டாக்டர் அரவிந்த், இதய மயக்கவியல் நிபுணர் டாக்டர் சரவணன், டாக்டர் ரோகிணி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்க்கை முறை மாற்றம், உணவுப் பழக்கம் போன்றவற்றைப் பற்றி பேசினர். இறுதியாக தலைமை யூனிட்ஹெட் சாமுவேல் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்,