திருச்சி மரக்கடை பகுதியில் அமைந்துள்ள அரசு சையத் முர்துஷா மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும்
காலை உணவுத் திட்டத்தையும் பார்வையிட்டு உணவின்தரம் சரியாக இருக்கிறதா எனவும் மாணவர்களுக்கு சரியான அளவில் உணவு வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து அவர்களுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டார்.
இந்த ஆய்வின் போது தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாவட்ட கல்வி அலுவலர் சிவக்குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் அரசு துறை அதிகாரிகள் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆகியோர் உடன் இருந்தனர்.