திருச்சி புத்தூர் குழுமி அம்மன் தெரு என்கிற கல்நாயக்கன் தெரு பகுதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலின் சித்திரை திருவிழா கடந்த 15 ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து இன்று உலக நன்மைக்காகவும், பொதுமக்கள் நோய் நொடி இன்றி வாழவும், மாணவ மாணவிகள் கல்வி அறிவு பெறவும், திருமண பாக்கியம் குழந்தை பாக்கியம் உள்ளிட்ட பல்வேறு வேண்டுதலுக்காக திருச்சி காவிரி ஆறு அய்யாளம்மன் படித்துறையிலிருந்து கரகம் எடுத்தும், தீர்த்த குடம், பால்குடம் அக்னி சட்டி ஏந்தியும், அலகு குத்தி சிலம்பாட்டத்துடன் பக்தர்கள் அம்மன் சன்னதி வந்தடைந்தனர்.

மேலும் நாளை 30-ம் தேதி அம்மன் கொலுவிருத்தல், மாவிளக்கு பூஜை நடைபெறுகிறது அதேபோல் மே 1-ம் தேதி காலை குட்டிக் குடித்தலும் மாலை மஞ்சள் நீராட்டு விழாவும் விடையாற்றி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

முன்னதாக உறையூர் பகுதி திமுக செயலாளர் இளங்கோ ஏற்பாட்டில் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது இந்த அன்னதான நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் . மேலும் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில்

சித்திரை திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தலைவர் விக்னேஸ்வரன் துணைத் தலைவர் அமர்நாத் செயலாளர் குட்டி பொருளாளர் மோகன்ராஜ் அறிவிப்பாளர் செல்வராஜ் கிராம முக்கியஸ்தர்கள் ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *