திருச்சிராப்பள்ளி மாவட்டம் கீழகல்கண்டார் கோட்டை அக்ரஹாரம் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் பாலாலய நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் கடந்த 12ம் தேதி முதல் கால வேள்வி மற்றும் அன்னதானம் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து 13ம் தேதி காலை 6 மணிக்கு மேல் 8 மணிக்குள் இரண்டாம் காலம் வேள்வி மற்றும் அதனைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது. அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் பரிவார சுவாமிகள் அனைத்திற்கும் பாலஸ்தாபனம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கிராம பொதுமக்களும் பக்த கோடிகள் உள்ளிட்ட ஏராளமாக கலந்து கொண்டு ஈசன் அம்பிகை அருள்பெற்று மகிழ்ந்தனர்.