திருச்சி அறிவாளர் பேரவையின் 25ஆம் ஆண்டு நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள மாயாஸ் ஹோட்டல் கூட்டரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு திருச்சி அறிவாளர் பேரவையின் முதன்மை ஆலோசகர் முனைவர் அசோகன் வரவேற்புரை ஆற்றிட பத்மஸ்ரீ சுப்புராமன் தலைமை தாங்கினார். தலைமை விருந்தினராக முன்னாள் அமைச்சர் நல்லுசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மேலும் சிறப்பு விருந்தினர்களாக அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ராஜேந்திரன், திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மை முதல்வர் பேராசிரியர் மருத்துவர் குமரவேல், ராயல் பர்னிச்சர் இலக்கிய ஆர்வலர் பொறியாளர் சாத்தப்பன், தொழிலதிபர் லட்சுமணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
விழாவில் திருச்சி அறிவாளர் பேரவையின் புதிய தலைவராக கிரிஜா பாலசுப்பிரமணியன், துணைத் தலைவர்களாக ராஜேஸ்வரி சுப்புராமன் மற்றும் ஹேமலதா முரளிதரன், பொதுச் செயலாளராக அனிதா டேவிட், பொருளாளர் அமுதா, இணை செயலாளர் சித்ரா சம்பத் ஆகியோர் நிர்வாகிகளாக உறுதிமொழி எடுத்து பொறுப்பேற்றுக் கொண்டனர்.