திருச்சி இனாம் புதுவாடி ஊராட்சியில் சாலை வசதி கேட்டு கவுன்சிலர் தலைமையில் அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்க வந்தனர் அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
திருச்சி மாவட்டம் வையம்பட்டி ஒன்றியம் இனாம் புதுவாடி ஊராட்சியில் பல வருடங்களாக சாலை அமைத்து தரப்படவில்லை மேலும் இப்பகுதியில் சாலை வசதி கேட்டு பலமுறை மாவட்ட அதிகாரிகளும் அமைச்சர்களிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம். அதிலும் கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது தேர்தல் புறக்கணிப்பு செய்யப்போவதாக பேனர் வைத்தோம் இந்நிலையில் காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையின்படி வட்டாட்சியர் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம நிர்வாக அலுவலர் ஊராட்சி செயலர் ஆகியோர் கையெழுத்திட்டு விரைவில் சாலை வசதி அமைத்து தருவதாக எழுத்துப்பூர்வமாக எழுதி கையெழுத்திட்டு உறுதியளித்தனர் ஆனால் தற்போது வரை சாலை அமைப்பதற்கான எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவே மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் எங்கள் ஊராட்சிக்கு சாலை வசதி அமைத்து தர வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.