திருச்சி அரியாறு, கோரையாறு, பழைய கட்டளை, புதிய கட்டளை, உய்யக்கொண்டான், குடமுருட்டி ஆறு. கொடிங்கால் ஆறுகளின் பெருமழை பேரிடர் பெரு வெள்ள பாதுகாப்பு விரிவாக்க சாலை திட்டத்திற்கு உடனடியாக நிதி ஒதுக்கி செயல்படுத்திட வேண்டும்.திருச்சி லால்குடி நந்தியாறு திட்டங்களை செயல்படுத்தி,
ஆக்கிரமிப்புகளை அகற்றி ,உயர்மட்ட தடுப்பணை கட்டி, நிலத்தடி நீர்மட்டம் உயர்த்தி ,ஏரி குளங்கள் பாதுகாக்கப்பட்டு, விவசாயம் செழிக்க ஓராண்டில் பல நூறு கோடி திட்டங்களை நிறைவேற்றிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி
தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சின்னதுரை தலைமையில் பொதுநல அமைப்புகளை சேர்ந்த விவசாயிகள் சுமார் 7 பேர் திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள உய்யக்கொண்டான் வாய்க்காலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது .
அதனைத் தொடர்ந்து உய்யக் கொண்டான் கால்வாயில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் மேற்கு தாசில்தார் ராஜவேலு வேளாண்துறை கலெக்டர் உதவியாளர் மல்லிகா விஓ செந்தில்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி கூடிய விரைவில் விவசாயிகள் கோரிக்கை நிறைவேற்றி தருவதாக எழுத்துப்பூர்வமாக அளித்ததன் பேரில் விவசாயிகள் தங்களின் போராட்டத்தை கைவிட்டனர்.