திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளது. இந்த எஸ் பி அலுவலகம் எதிரே உள்ள சுந்தர்ராஜ் நகர் பகுதியில் வசித்து வருபவர் திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அதிகாரியான அமலா தாஸ் இவரது வீட்டின் மாடி காலியாக உள்ளது அதனால் வீடு வாடகைக்கு உள்ளது என tolet போர்டு மாட்டி உள்ளார் இதனை பார்த்து பல்வேறு நபர்கள் வீடு வாடகைக்கு கேட்டு வந்து சென்றுள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக வாலிபர் ஒருவர் வீடு பார்ப்பதற்த வந்து சென்றதாகவும், மேலும் இன்று காலை 10 மணி அளவில் வங்கிக்கு செல்வதற்காக அமலா தாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தார் அப்போது வீடு பார்க்க வந்த அந்த மர்ம நபர் அவரைப் பார்த்ததும் அவர் கழுத்தில் அணிந்திருந்த நான்கு பவுன் தங்க சங்கிலியை பறித்தார் உடனே சுதாரித்துக் கொண்ட அமலதாஸ் மர்ம நபரின் இரு சக்கர வாகனத்தின் பின்பக்கத்தை பிடித்து இழுத்து திருடன் திருடன் என கூச்சலிட்டார். ஆனால் அந்த மர்ம நபர் இருசக்கர வாகனத்தை வேகமாக எடுத்துக்கொண்டு சென்றார் இந்நிலையில் இருசக்கர வாகனத்தை பிடித்திருந்த ஒய்வு பெற்ற அதிகாரி அமலதாஸ் சாலையில் தாராதாரா என இழுத்து செல்லப்பட்டு தூக்கி வீசப்பட்டார்.
ஓய்வு பெற்ற அதிகாரி அமலதாஸ் கை கால்கள் ஆகியவற்றில் பலத்த காயம் ஏற்பட்டது மேலும் இது குறித்து திருச்சி கே கே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் அடிப்படையில் சம்பவ இடம் வந்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடி கேமராக்களை ஆய்வு செய்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இருக்கும் இடத்தை சுற்றி காவலர்கள் குடியிருந்து வருகின்றனர் மேலும் அப்பகுதி முழுவதும் அடிக்கடி காவலர்கள் சென்று வந்து கொண்டிருக்கின்றனர் இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் ஓய்வு பெற்ற அதிகாரியின் வீட்டின் வாசலில் அவரது கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பார்த்து சென்ற சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.