திருச்சி விமான நிலையத்தில் இன்று கோலாலம்பூரில் இருந்து வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்த பயணிகள் சோதனை முடிந்து விமான நிலையத்திற்கு வெளியே வரும் பொழுது அதில் பயணம் செய்த 2 பேர் மீது சந்தேகப்பட்டு சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களது பேக்கை சோதனை செய்த போது.
அதில் சிறிய சிறிய பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 6850 சிறிய ஆமைகள் இருந்தது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் வன அலுவலர் உதவியுடன் அந்த ஆமையின் வகைகள் ரெட் இயர்ட் ஸ்லைடு என கண்டறியப்பட்டு இது அமெரிக்காவில் வாழும் உயிரினம் என்றும் கண்டுபிடித்தனர்.
அவர்களிடம் இருந்து இந்திய மதிப்பில் ரூபாய் 57 ஆயிரத்து 441 மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தையும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 6850 சிறிய ஆமை வகைகளை மீண்டும் அந்த ஆமை இனம் வாழும் அமெரிக்காவிற்கு அனுப்பும் பணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.