மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சர்வதேச திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு ஏர் ஏசியா விமானம் பயணிகளுடன் நேற்று இரவு வந்து இறங்கியது .விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமானம் நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது பயணி ஒருவர் கேஸ் சிலிண்டர் ரெகுலேட்டரில் தங்கக் கட்டிகளை உருண்டை வடிவில் எடுத்து, கடத்தி வந்தது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் எடை 194 கிராம் ஆகும் .இதன் மதிப்பு ரூ.15 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் 424 ரூபாயாகும். தொடர்ந்து அந்த பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.