திருச்சி ஒத்தக்கடை கான்வென்ட் ரோடு பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீ ராஜ கணபதி, முண்ணுடையான், மாசி சப்பாணி கருப்பண்ண சுவாமி, அன்னை முத்து மாரியம்மன் திருக்கோவிலின் 46-ஆம் ஆண்டு திருவிழா கடந்த 7 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
தொடர்ந்து இரண்டாவது மஞ்சள் காப்பு நிகழ்ச்சி, திருத்தேர் வீதி உலா மற்றும் மாவிளக்கு பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று காலை குட்டி குடி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாளைய தினம் அன்னதானமும், 25 ஆம் தேதி மஞ்சள் நீராட்டு விழா மற்றும் காவிரி அய்யாளம்மன் படித்துறையில் பூவிடும் விழா நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் ஸ்தாபர்கள் மருளாளி முனியன், மருளாளி முனுசாமி ஆகியோர் செய்து வருகின்றனர்.