திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய பல்வேறு இடங்களில் மின் மயானங்களை ஏற்படுத்தியுள்ள பொழுதிலும், திருச்சி காவிரி கரையில் ஓயாமரி பகுதியில் இந்து முறைப்படி கோமாதா சானத்தினாலும், மரங்களினாலும் சாதாரண முறையில் உடல்களை எரியூட்டப்படுவதை பல்வேறு இந்துக்கள் செய்து வருகிறார்கள்.
ஓயாமரி சுடுகாடு வளாகத்தை சுற்றி போதுமான மின் இணைப்புகளை திருச்சி மாநகராட்சி ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஓயாமரி பகுதியில் புதிதாக உடல்களை எரிக்க பயன்படுத்தப்படும் தகன மேடையில் போதிய வெளிச்சம் இல்லை என்றும், இதன் காரணமாக இரவு நேரங்களில் உடல்களை தகனம் செய்யும் வரும் பொதுமக்கள் தங்களின் செல்போன் வெளிச்சத்தில் உடல்களை தகனம் செய்ய வேண்டியுள்ளது என பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
எனவே திருச்சி மாநகராட்சி மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஓயாமரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தகன மேடைக்கு போதுமான மின் இணைப்பு அமைத்து தர கோரி மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர் வக்கீல் கிஷோர் குமார் மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்:-