திருச்சி – திண்டுக்கல் சாலை கருமண்டபம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ இளங்காட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஆலயம் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. மேலும் புதிய விக்ரகங்கள் பிரதிஷ்டை செய்து பூஜைகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று காலை 7:10 மணி அளவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதிகாலை சிறப்பு பூஜைகளை தொடர்ந்து புனித நீர் அடங்கிய குடங்கள் மேலதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். இந்த விழாவில் முன்னாள் அதிமுக கோட்டத் தலைவர் ஞானசேகர், கருமண்டபம் பகுதி திமுக நிர்வாகி பி ஆர் பி பாலசுப்ரமணியம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.