திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த இடையாற்று மங்களத்தை சேர்ந்தவர் அமலா சாந்தினி இவரது கணவர் செல்வகுமார் தம்பதிக்கு ஒரு ஆண் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் அமலா சாந்தினி வாரிசு சான்றிதழ் வாங்குவதற்காக பெட்ட வாய்த்தலையை சேர்ந்த வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் என்பவரிடம் 1.90 லட்சம் ரூபாயை கொடுத்து ஏமாந்துள்ளார் –
இதே போல் சமூக ஆர்வலர் பெட்டிசன் காமராஜ் என்பவரிடம் 5.75 லட்சம் பணம் கொடுத்து ஏமாந்துள்ளார். மேலும் இந்த இருவரும் வாரிசு சான்றிதழ் வாங்கி தராமல் காலம் தாழ்த்தி வந்தனர். மேலும் அமலா சாந்தினியை ஏமாற்றி பணம் பறிக்கப்பட்டது தெரியவந்தது இந்நிலையில் பணத்தை திருப்பி கேட்டதற்கு இருவரும் தர மறுத்து விட்டனர்.
இந்நிலையில் இவர்கள் இருவர் மீதும் ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அமலா சாந்தினி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தினர். மேலும் அவரது உடலில் தண்ணீர் ஊற்றி அவரை சமாதானப்படுத்தினர் மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.