திருச்சி மாவட்டம், லால்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட தாளக்குடி ஊராட்சியை திருச்சி மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாளக்குடி கிராம பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் தாளக்குடி ஊராட்சியை மாநகரட்சியுடன் இணைக்கக் கூடாது என கோஷங்கள் எழுப்பி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
மேலும் மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து மனுவை பெற்றுக் கொள்ள வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர் இந்நிலையில் மேற்கு வட்டாட்சியர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை நேரில் சந்தித்து கோரிக்கையை கேட்டு கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டு அதற்கான ரசீதை வழங்கினார்,மேலும் தங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டதாக பொதுமக்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர். மேலும் வருகின்ற 26 ஆம் தேதி கிராம சபை கூட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டு தங்களது கோரிக்கையை முன்வைக்க உள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.