திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது. பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகள் பெருந்திரளானோர் பங்கேற்ற இந்த கூட்டத்தில் ஆட்சியரிடம் தங்களது கோரிக்கைகளை விவசாயிகள் அளித்தனர்.
தொடர்ந்து விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு உரையாற்றியபோது
பெண் விவசாயி கௌசல்யா மற்ற விவசாயிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும் அய்யாக்கண்ணு நீண்ட நேரம் உரையாற்றுகிறார் எனவும் கேள்வி எழுப்பியதால் ஆத்திரமடைந்த வாக்குவாதம் ஏற்பட்டது அப்போது விவசாயிகளுக்குள் வாக்குவாதம் மோதலாக உருவெடுத்தது .இதை அதிகாரிகள் சமதரசம் செய்து வைத்தனர்.
திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் மற்றும் அரசு அதிகாரிகள் முன்பு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு மீது பெண் விவசாயி கவுசல்யா எஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்க சென்றார்.