திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கட்சியின் அமைப்பு மறு சீரமைப்பு தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தியாகி அருணாச்சலம் மன்றத்தில் நடைபெற்றது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி இணைப் பொருளாளர் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் சொத்து பாதுகாப்பு குழு தலைவர் முன்னாள் மத்திய மந்திரி விஜய் இந்தர் சிங்கிலா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய மாவட்ட தலைவர்கள் நியமனம் தொடர்பாக கருத்து கேட்டு ஆலோசனைகள் வழங்கினார். அவர் பேசும்போது, மாவட்ட தலைவர்களை தேர்ந்தெடுக்க உங்களின் கருத்துக்களை கேட்க வந்திருக்கின்றேன். யாரை மாவட்ட தலைவராக நியமித்தால் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற முடியும் என்பது உங்களுக்கு தான் தெரியும். மாவட்ட பொறுப்புகளுக்கு குற்றபின்னணி உள்ளவர்களை நியமிக்க கூடாது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஆகவே கட்சிக்கு விசுவாசமானவர்கள் மற்றும் கட்சிக்கு உழைத்தவர்களை மட்டும் அடையாளம் காட்டுங்கள் என்றார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகக்குழு உறுப்பினர் எஸ் எஸ் ராமசுப்பு , ஈரோடு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் இ பி ரவி ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர். கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் எல் ரெக்ஸ் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ், மாநில சிறுபான்மை பிரிவு முதன்மை துணைத் தலைவர் பேட் ரிக் ராஜ்குமார், மாநகராட்சி கவுன்சிலர் சோபியா விமலா ராணி, இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் அபுதாஹிர், மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சரவணன், மாநில செயலாளர் இளங்கோ, மாவட்ட பொருளாளர் முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கோட்ட தலைவர்கள் ராஜா டேனியல் ராய், பிரியங்கா பட்டேல், ஜெயம் கோபி, தர்மேஷ் வெங்கடேஷ் காந்தி பாக்கியராஜ், எட்வின், அழகர், ராகவேந்திரா, ஐடி பிரிவு லோகேஷ், அமைப்புசாரா தலைவர் மகேந்திரன், இளைஞர் காங்கிரஸ் நரேன், மாவட்ட மகிளா காங்கிரஸ் அஞ்சு மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் கோகிலா சீலா செலஸ், அணி நிர்வாகிகள் பஜார் மைதீன், கலைப்பறிவு அருள், எஸ்சி எஸ்டி பிரிவு கலியபெருமாள், என் ஜி ஓ கண்ணன், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்