திருச்சி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் மேலசிந்தாமணி லோகா டவர் மண்டபத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் கவுன்சிலர் ரெக்ஸ் தலைமையில் இன்று நடைபெற்றது, இதில் திருச்சி மாநகர் மாவட்ட சிறுபான்மை துறை தலைவர் பஜார் மைதீன் முன்னிலை வகித்தார், சிறப்பு அழைப்பாளராக முன்னாள் திருச்சி பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய மாநில அமைச்சருமான திருநாவுக்கரசர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
நிகழ்வில் தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜன், தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பென்னட் அந்தோணிராஜ், சிறுபான்மை துறை மாநில முதன்மை துணைத்தலைவர் பேட்ரிக் ராஜ்குமார், மாவட்ட பொருளாளர் முரளி, கிழக்கு தொகுதி அமைப்பாளர் மன்சூர் அலி, மாவட்ட துணை தலைவர் அபுதாஹிர், கவுஸ். கோட்டத்தலைவர்கள் மலைக்கோட்டை வெங்கடேஷ் காந்தி, மார்க்கெட் பகதுர்ஷா, அரியமங்கலம் அழகர், ஜங்ஷன் பிரியங்கா படேல், உறையூர் பாக்யராஜ், இளைஞர் காங்கிரஸ் விஜய் படேல் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.