திருச்சி மாநகர் மாவட்டம் ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்கோவில் கோட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக வாக்கு திருட்டுக்கு எதிராக பொது மக்களிடம் கையெழுத்து வாங்கும் நிகழ்ச்சி திருச்சி மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவரும், கவுன்சிலருமான ரெக்ஸ் தலைமையில் இன்று நடைபெற்றது, இந்நிகழ்வில் ஸ்ரீரங்கம் கோட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயம் கோபி (எ) சுதர்சனம் மற்றும் திருவானைக்கோவில் கோட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் அகில் (எ) தர்மேஷ் ஆகியோர் முன்னிலையில், சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த பொதுச் செயலாளர் தணிகாசலம்,
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர் பெனட் அந்தோணி ராஜ் ஆகியோர் கலந்துகொண்டு மத்திய பாஜக மோடி அரசு தேர்தல் ஆணையத்தின் துணையோடு இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட வாக்குத்திருட்டை ஆதாரங்களோடு வெளிப்படுத்திய, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியினுடைய தெளிவான பட்டியலை பொது மக்களிடம் விளக்கினர். இந்நிகழ்வில் கோட்ட நிர்வாகிகள் செல்வி குமரன்,கிருஷ்ணமூர்த்தி, தியாகராஜன், பாதயாத்திரை நடராஜன், வார்டு தலைவர்கள் விவேக், மணிமொழி, ஹீரா, வார்டு நிர்வாகிகள் பெரியசாமி, பரணிதரன் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு மக்களிடம் கையெழுத்து வாங்கினர்.