திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் மற்றும் திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து சில்லறை வியாபாரிகள் பொதுநல சங்கம் சார்பில் நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் இன்று நடைபெற்றது இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கமலக்கண்ணன், மற்றும் திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து சில்லறை வியாபாரிகள் பொதுநல சங்க தலைவர் ஜெய்சங்கர் ஆகியோர் தலைமை தாங்கினார். இதில் செயலாளர்கள் மூர்த்தி டேவிட் அமல்ராஜ் துணைச் செயலாளர் மாரியப்பன் கூடுதல் செயலாளர் மந்தை ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்களாக:- மொத்த வியாபாரிகள் சில்லறை வியாபாரத்தை நிறுத்தக்கோரியும், இங்கிலீஷ் காய்கனி உள்ளிட்ட அனைத்து மொத்த வியாபாரிகளும் சில்லறையில் காய்கனி விற்பனை செய்வதை நிறுத்த கோரியும் காந்தி மார்க்கெட் மொத்த வியாபாரிகளுக்காக தமிழக அரசால் பல கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா கண்டும் செயல்பாட்டிற்கே வராமல் கிடக்கும் மணிகண்டம் ஒன்றியம் கள்ளிக்குடி மார்க்கெட்டிற்கு இங்கிலீஷ் காய்கனி உள்ளிட்ட மொத்த வியாபாரிகள் உடனே இடமாற்றம் செய்யக் கோரியும், அதேபோல் இங்கிலீஷ் காய்கனி உள்ளிட்ட மொத்த வியாபாரிகள் தங்களின் சுய லாபத்திற்காக சரக்கு வாகனங்களை மணிமண்டப சாலை, நெல்பேட்டை தெரு, தர்பார் மேடு தஞ்சை ரோடு என அனைத்து பகுதிகளில் நிறுத்தி பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் காந்தி மார்க்கெட் உள்ளே மொத்த வியாபாரத்திற்கு வரும் கனரக வாகனத்தை விடிய விடிய மார்க்கெட் உள்ளே நிறுத்தி வைத்துக் கொண்டு சில்லறை வியாபாரிகளுக்கு தொந்தரவு கொடுப்பதை தடுத்து நிறுத்தக் கூறுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மேலும் இது குறித்து திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் கமலக்கண்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- எங்களின் கோரிக்கைகளை பரிசளித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் உடனே நடவடிக்கை வேண்டும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அனைத்து சில்லறை வியாபாரிகளும் ஒன்று சேர்ந்து காந்தி மார்க்கெட் முழுவதும் கருப்புக்கொடி ஏந்தி வியாபாரம் செய்வது எனவும், அதேபோல் காந்தி மார்க்கெட் உள்ளே அனைத்து நுழைவாயில் கேட்டுகளை அடைத்து உள்ளிருப்பு போராட்டம் நடத்துவது எனவும், மொத்த வியாபாரிகள் சில்லறை வியாபாரத்தை நிறுத்திவிட்டால் சரக்கு வாகனங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது மற்றும் மார்க்கெட் உள்ளே செல்லும் சரக்கு வாகனங்கள் குறிப்பிட்ட காலக்கெடுக்குள் இரண்டு மணி நேரத்திற்குள் வெளியே செல்ல வேண்டும். வெளியே செல்லவில்லை என்றால் சில்லறை வியாபாரிகள் தஞ்சை ரோட்டை மரித்து தரை கடை போட்டு வியாபாரம் செய்யும் போராட்டம் நடத்தபோவதாக தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *