திருச்சி மாநகர காவல்துறைக்கு புதியதாக Labrador Retriever என்ற இனத்தை சேர்ந்த ஒரு மோப்ப நாய் வாங்கப்பட்டு அதற்கு BOND என்று பெயரிடப்பட்டது. மேலும் மோப்ப நாய்க்கு கடந்த 08.08.2022-ந்தேதி முதல் 03.02.2023 வரை கோயம்புத்தூர் பயிற்சி மையத்தில் 06 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டு,
இன்று (06.02.2023)-ந்தேதி முதல் திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா முன்னிலையில் திருச்சி மாநகர மோப்பநாய் படை பிரிவில் பணிக்கு சேர்க்கப்பட்டுள்ளது. சிறப்பு பயிற்சி பெற்ற மோப்பநாய் பாண்டை திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா கை கொடுத்து வாழ்த்து தெரிவித்து வரவேற்றார்.