திருச்சி காவேரி மகளிர் கல்லூரி மாணவியர் பேரவை பதவி ஏற்பு விழா ஓ பி ராமசாமி ரெட்டியார் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஜோசப் கல்லூரியின் முதல்வர் அருட்தந்தை ஆரோக்கியசாமி சேவியர் கலந்துகொண்டார், கல்லூரி முதல்வர் முனைவர் சுஜாதா வரவேற்புரை ஆற்றினார், கல்லூரி ஆட்சி மன்ற குழு செயலாளராக நீலகண்டன், கல்லூரி ஆட்சி மன்ற குழு பொருளர் சந்திரசேகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினருக்கு நினைவு பரிசு கொடுத்து கௌரவித்தனர்,
மாணவியர் பேரவை உறுப்பினர் பட்டியலை வணிக நிர்வாகவியல் துறை தலைவர்தமிழ்ச்செல்வி பெயர் பட்டியலை வாசிக்க பேரவை உறுப்பினர்களை சிறப்பு விருந்தினர் பதவி பிரமாணம் ஏற்கச் செய்தார்,மேலும் சிறப்பு விருந்தினர் உறுதிமொழி வாசிக்க மாணவியர் அனைவரும் அவரை பின்பற்றி உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
மாணவியர் பேரவை தலைவி மூன்றாம் ஆண்டு வணிக நிகழ்வுகள் துறை மாணவி ஹரிணி ஏற்புரை வழங்கினார்.மேலும் இந்நிகழ்வில் கல்லூரி விழா மலரினை சிறப்பு விருந்தினர் வெளியிட முதல் பிரதியை கல்லூரி ஆட்சி மன்ற குழு செயலாளர் நீலகண்டன் பெற்றுக்கொண்டார் நிகழ்ச்சியின் முடிவில் உணவு முறையியல் துறை மாணவி சுவேதா நன்றி கூறினார்.