திருச்சி மாநகராட்சி 32, 33 ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் எடத்தெரு பழைய கோவில் மண்டபத்தில் இன்று நடந்தது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்து பட்டா மாறுதல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார். திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மாநகர திமுக செயலாளரும் மண்டல குழு தலைவருமான மதிவாணன் ஆகியோர் முன்னிலை இந்த நிகழ்ச்சியில் வகித்தனர். இந் நிகழ்வுகளில் 33 வது வார்டு கவுன்சிலர் துணை மேயர் திவ்யா, 32வது வார்டு கவுன்சிலரும் கோட்ட தலைவருமான ஜெய நிர்மலா பகுதி செயலாளர் ராஜ் முகமது, வட்டச் செயலாளர்கள் தனக்கோடி மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் திரளாக அப்பகுதிகளின் வாழும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பல்வேறு துறைகள் சம்பந்தப்பட்ட மனுக்களை வழங்கி வருகின்றனர்.
பல மனுக்களுக்கு உடனடியாக தீர்வுகள் காணப்பட்டு வருகிறது முகாமில் உள்ள 13 துறைகளின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, எரிசக்தி துறை, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, குரு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவை துறை, சிறப்பு திட்ட செயலாக்கு துறை மற்றும் இலவச மருத்துவ முகாம் ஆகிய 43சேவைகளின்அரங்குகள் அமைக்கப்பட்டு மக்களுக்கான சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.