திருச்சி திருவெறும்பூர் கீழக்குறிச்சி கிராம பஞ்சாயத்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இன்று மாலை திருச்சி தென்னூர் உழவர் சந்தை அருகே உள்ள பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் திருச்சி எம்பி திருநாவுக்கரசை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருச்சி திருவெறும்பூர் கீழக்குறிச்சி கிராம பஞ்சாயத்து பகுதியில் உள்ள சாலையை கையகப்படுத்தினால் பல்வேறு பணிகளுக்காக பொன்மலையில் இருந்து திருச்சி டவுன் சத்திரம் பேருந்து நிலையம் காட்டூர் என்று பல்வேறு இடங்களுக்கு செல்ல இந்த முக்கிய சாலையை கடந்து செல்ல வேண்டி உள்ளது மேலும் கீழக்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து செல்லும் ஆம்புலன்ஸ் சேவையும் பாதிக்கப்படும்
விவசாய மக்கள் விவசாயத்திற்கென்று வாங்கும் அனைத்து பொருட்களும் விளைவித்து பொருட்களை கொண்டு செல்வதற்கும் பால் வியாபாரங்களும் வரப்போக இந்நாள் வரையிலும் இடையூறு இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது விமான நிலையத்திலிருந்து நிலம் கையகப்படுத்துதல் குறித்து வெளியான செய்தியை தொடர்ந்து இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவே சாலையை துண்டித்து விடாமல் தொடர்ந்து எங்கள் கிராமத்திற்கு நல்லது செய்ய வேண்டி விமான நிலைய நிர்வாகத்துடன் பரிந்துரைக்குமாறு கேட்டு எம்.பி திருநாவுக்கரசுவிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். இந்த நிகழ்வின் போது கவுன்சிலர்கள் கோவிந்தராஜ், ரெக்ஸ் மற்றும் நிர்வாகி பேட்ரிக் ராஜ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.