திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த கீழப் பெருங்காவூர் கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் அருள்மிகு சங்கிலி கருப்பு திருக்கோவில் ,பெரியண்ணசாமி ,காமாட்சி அம்மன் மற்றும் அதன் பரிவார தெய்வங்களுக்கு 2025 ஆம் ஆண்டு ஆடிப்பெருக்கு விழா மற்றும் கிடா வெட்டும் பெருவிழாவானது வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி தொடங்க உள்ளது . ஆகஸ்ட் 8ம் தேதி வெள்ளிக்கிழமை சங்கல்பவம் , விக்னேஸ்வரர் பூஜை , புண்யாக வாஜனம் ,முகூர்த்த கால் நடுதல் , கோபூஜை ,கலச பூஜை மூல மந்திர ஹோமம் ,ஜபம் பாராயணம் , திறவ்யாஹீதி, நடைபெற உள்ளது.

 தொடர்ந்து மதியம் 12 மணிக்கு மேல் மகாபூர்ணகிதி ,கடன் புறப்படுதல் ,கலச அபிஷேகம் ,தீபாரதனை நடைபெற்று பிரசாதம் வழங்கப்படும் . தொடர்ந்து ஆகஸ்ட் 9ஆம் தேதி சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெறும் .விழாவின் இறுதி நாளான ஆகஸ்ட் 10 ம் தேதி காலை 8 மணி முதல் 11 மணி அளவில் சிறப்பு அபிஷேகம்,அர்ச்சனை , சந்தன காப்பு அலங்காரம் , குலதெய்வங்கள் மற்றும் உக்கிற தெய்வங்களுக்கு ஆடு கிடா வெட்டுதல் அசைவ நிறுத்தி படைகளும் இதர தெய்வங்களுக்கு சுத்தப் படைகளும் அதனைத் தொடர்ந்து மெகா அசைவ அன்னதானம் நடைபெற உள்ளது

தொடர்ந்து மாலை வான வேடிக்கையுடன் விழா நிறைவு பெறுகிறது . ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு குலதெய்வ குளிப்பாட்டு மக்கள் மற்றும் பங்காளிகள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் வருகை தந்து கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டுமாய் சங்கிலி கருப்பு பெரியண்ணசாமி மற்றும் காமாட்சி அம்மன் வகையறா குலதெய்வ குளிப்பாட்டு மக்கள் அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளனர் . விழாவிற்கான ஏற்பாடுகளை பொறியாளர் கதிரவன், பிரபு, ரமேஷ், பெரியசாமி,அருணகிரி, மயிழ்வானன் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் முன்னிலையில் செய்து வருகின்றனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்